செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘சந்திரமுகி 2’ அப்டேட்

‘சந்திரமுகி 2’ அப்டேட்

1 minutes read

நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லோரன்ஸ் நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரையுலகின் மூத்த நட்சத்திர இயக்குநரான பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் ‘வைகைப்புயல்’ வடிவேலு, பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், ரவி மரியா, டி. எம். கார்த்திக், நடிகைகள் மகிமா நம்பியார், சம்யுக்தா சண்முகநாதன், சிருஷ்டி டாங்கே, லட்சுமிமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். 2005 ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் இந்த திரில்லர் ஜேனரிலான திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன் படப்பிடிப்பில் பங்கு பற்றிய நட்சத்திர நடிகர் நடிகைகளின் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ‘வைகைப்புயல்’ வடிவேலு, ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் என்பதும், இவரும் கதையின் நாயகனான ராகவா லோரன்ஸ் பங்குப்பற்றும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்பட வைக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.