Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் கோடை விடுமுறையில் வெளியாகும் ‘பாபா பிளாக் ஷீப்’

கோடை விடுமுறையில் வெளியாகும் ‘பாபா பிளாக் ஷீப்’

1 minutes read

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகரும், இணையதள உலகின் முன்னணி நட்சத்திரமுமான விக்னேஷ் காந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பாபா பிளாக் ஷீப்’ எனும் திரைப்படத்தினை எதிர்வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘பாபா பிளாக் ஷீப்’. இந்த திரைப்படத்தில் விக்னேஷ் காந்த் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பிளாக் ஷீப் எனும் இணையதள நிகழ்வில் பங்குபற்றும் நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். மேலும் ‘அசுரன்’ புகழ் அம்மு அபிராமி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார் பாடசாலையில் பயிலும் மாணவர்களின் காதலும், குறும்புகளையும் மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் கோடைகால விடுமுறையில் இந்த திரைப்படம் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More