செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஹிர்துஹாரூன் நடிக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹிர்துஹாரூன் நடிக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 minutes read

‘தக்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ‘ டியூட் ‘ படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் ஹிர்துஹாரூன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் செல்வக்குமார் திருமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டெக்ஸாஸ் டைகர்’ எனும் திரைப்படத்தில் ஹிர்துஹாரூன் , சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி , சாச்சனா , வாஃபா கதீஜா, பீட்டர் .கே , பார்த்திபன் குமார் , அண்டனி தாசன் , சம்யுக்தா ஷான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌

விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி குமார் – பார்த்திபன் குமார்-  சுஜித் – செல்வகுமார் திருமாறன்-  ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது இசை தொடர்பான இளமை ததும்பும் வண்ணமயமான படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.