செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கதையின் நாயகர்களாக தோன்றும் ராதா ரவி – ரவி மரியா கூட்டணி

கதையின் நாயகர்களாக தோன்றும் ராதா ரவி – ரவி மரியா கூட்டணி

1 minutes read

தமிழ்த் திரையுலகில் வில்லன் – நகைச்சுவை – குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பல தலைமுறைகளை கடந்து தொடர்ச்சியாக பெற்று வரும் நட்சத்திரங்களான ரவி மரியா – ராதா ரவி ஆகிய இருவரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடித்து வருகிறார்கள்.

இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, நிழல்கள் ரவி, கஞ்சா கருப்பு, இயக்குநர் பேரரசு , நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தை துர்காஸ் தொகுக்கிறார் .

நகைச்சுவை பின்னணியில் நையாண்டி அரசியலாக தயாராகும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் – இயக்குநர்- நடிகர் ராம்தேவ் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ராதா ரவி-  ரவி மரியா ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக இணைந்து திரையில் தோன்றி, தற்கால அரசியலை நகைச்சுவையான பின்னணியில் அலசுகிறார்கள். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் ” என்றார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரம் தொடங்குகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.