Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சுக்கினி பொரியல் | செய்முறை

சுக்கினி பொரியல் | செய்முறை

2 minutes read

உங்கள் சுவையை தூண்டும் சுக்கினி பொரியல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சுக்கினி பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

 

சமைக்க தேவையானவை

உணவு செய்முறை : சுக்கினி பொரியல்

  • Step 1.

    முதலில் வெட்டிய சுக்கினி துண்டுகளை ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும், ஒரு தட்டில் மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவேண்டும் .

  • Step 2.

    கலந்த பின்பு அக்கலவையில் வெட்டிய சுக்கினி துண்டு ஒன்றை வைக்கவேண்டும். பின்னர் வெட்டிய சுக்கினிதுண்டு ஒன்றின் எல்லா பக்கமும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு கலவையை படும்படி நன்றாக பிரட்டி சிறிது நேரம் சுக்கினி துண்டை அதில் ஊறவிடவும்.

  • Step 3.

    அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவேண்டும். இப்பொழுது எண்ணெய் சூடானதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு கலவையில் ஊறிய சுக்கினி துண்டுகளை போட்டு நன்றாக பொரிக்கவும்.

  • Step 4.

    நன்றாக பொரிந்ததும் அதனை மற்ற பக்கம் திருப்பி போட்டு பொரிக்கவும்.பின்பு மேலதிகமாக உள்ள எண்ணெயை நன்றாக வடித்து விட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

  • Step 5.

    இதனை போல மற்றவற்றையும் பொரித்து எடுத்து தட்டில் வைக்கவும்.சுவையான சத்தான செய்வதற்கு இலகுவான சுக்கினி பொரியல் தயாராகி விட்டது.ஒருதட்டில் பாண்(ப்ரெட்)துண்டுகள், இடியாப்பம், புட்டு, சோறு(சாதம்)இவற்றில் ஒன்றுடன் சுவையான சத்தான சுக்கினி பொரியலை வைத்து பரிமாறவும்.

     

    நன்றி : அறுசுவை சமையல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More