செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் செட்டிநாடு இறால் குழம்பு | செய்முறை

செட்டிநாடு இறால் குழம்பு | செய்முறை

1 minutes read

 

 

தேவையான பொருட்கள் :

இறால் – 500 கிராம்

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 4

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 25 பல்

இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

 

தாளிக்க :

நல்லெண்ணெய் – தேவையான அளவு

சோம்பு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

 

பொடி  வகைகள் :

மிளகாய் பொடி – 3 தேக்கரண்டி

சாம்பார் பொடி – 3 தேக்கரண்டி

மிளகு,சீரக தூள் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

 

செய்முறை :

 

1.இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

 

2.ஒரு கடாயில் நல்லெண்ணையை ஊற்றி சூடேறிய பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து பின் வெங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.

 

3.பின் இறாலை போட்டு நன்றாக வதக்கி அதில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வதக்கி அதன் பின் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

 

4.இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின் போடி வகைகளை போட்டு கிளறி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு பாதி வெந்ததும் உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட்டு பச்சை வாசம் போன பின் சிறிது மிளகு தூள் தூவி இறக்கவும்.

 

 

நன்றி : சமையல் புலி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.