வெண்டைக்காய் மசாலா | செய்முறை

தேவையான பெருள்கள்

வெண்டைகாய் -அரைகிலோ
வெங்காயம் -2
தக்காளிப்பழம் -2
தேங்காய்த்துருவல் -2ஸ்பூன்
கடலை மாவு -1
எண்ணெய் -தேவையான அளவு
காய்ந்த மிளகாய் -3
கசகசா -1ஸ்பூன்
பட்டை -1சிறியதுண்டு
கொத்துமல்லி -சிறிதளவு
மஞசள் தூள் -ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு

செய்முறை

வெண்டைக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்துருவல் தக்காளி சிறிய வெங்காயம் கொத்தமல்லி கசகசா பட்டை காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சோத்து விழுதாக அரைத்தக்கொள்ளவும்

அரைத்த விழுதில் தேவையான அளவு உப்பு மஞசள்தூள் நறுக்கிய வெண்டைக்காய் ஆகியன சோத்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும் .கலவையை அரைமணி நேரம் ஊறவிடவும்

கடலைமாவைப் பச்சை வாசனை நீங்கும் வரை வறுத்துக்கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு காயந்தவுடன் வெண்டைக்காய் கலவையைக் கொட்டி நன்கு வதக்கவும் பின்பு கடலைமாவைப் பரவலாகத் தூவி மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கி வைக்கவும்.

 

நன்றி : தமிழ்க்குறிஞ்சி

ஆசிரியர்