Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் தக்காளி சட்னி செய்வது எப்படி?

தக்காளி சட்னி செய்வது எப்படி?

1 minutes read

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  1. வேகவைத்த தக்காளி பழம்- 3
  2. பச்சைமிளகாய் – 4
  3. வெங்காயம் – 1/2 கப்
  4. துருகிய தேங்காய் – 1/4 கப்
  5. உப்பு – தேவையான அளவு
  6. பூண்டு – இரண்டு பற்கள்
  7. எண்ணெய் – தேவையான அளவு

சுவையான தக்காளி சட்னி செய்வது எப்படி?

தக்காளி சட்னி செய்முறை:

step: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடேறியதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.

step: 2

பின் வேகவைத்து தோல் நீக்கி எடுத்து வைத்துள்ள தக்காளி பழத்தினை வெங்காயத்துடன் சேர்த்து, நன்றாக கொத்திவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

step: 3

பிறகு பச்சைமிளகாயின் காரத்தை பொறுத்து, 4 அல்லது 5 பச்சைமிளகாயினை சேர்த்து நன்றாக வதக்கிவிடுங்கள்.

பின் துருகி வைத்துள்ள தேங்காயினை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிவிடுங்கள்.

step: 4

பின் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைத்து மிக்சியில் நன்றாக மைபோல் அரைதேடுக்கவும்.

step: 5

பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.

 

நன்றி : பொது நலம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More