வெஜிடபிள் கட்லெட் | செய்முறை

தேவையான பொருள்கள்

உருளைக்கிழங்கு – அரை கிலோ
கேரட்,பீட்ரூட், – 2 கப்
பிரட்தூள் – 1 கப்
சோளமாவு – 2 ஸ்பூன்
எண்ணை ,உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 2
இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தண்ணீர்விடாமல் கெட்டியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கேரட்,பீட்ரூட்,வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி பின்னர் காய்கறிகளை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி முக்கால் பாகம் வேகும் வரை வைத்திருக்கவும்.

இந்த காய்கறிக் கலவையை மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் மிளகாய்தூள் ,சோளமாவு சேர்த்து நன்றாக பிசையவும்.

ஒரு பாத்திரத்தில் பிரட் தூள் கொட்டி வைக்கவும். ஒரு தட்டில் சிறிதளவு தண்ணீருடன் சோளமாவு சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

காய்கறிக் கலவையை சிறிய உருண்டைகளாக்கி தட்டி அதனை சோளமாவு கலவையில் புரட்டி பின்னர் பிரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சுவையான கட்லெட்டை டொமாடோ சாஸுடன் பரிமாரவும்.

 

நன்றி : தமிழ்க்குறிஞ்சி

ஆசிரியர்