June 7, 2023 5:48 am

பாவற்காய் சம்பல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
பாவற்காய்

பாவற்காய் உண்ண விருப்பம் இல்லாதவர்கள் கூட இதை உண்டால்  பாவற்காய் விரும்பி உண்ணுவார்கள் இப்போது பாவற்காய் சாம்பல் எப்படி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 

பாவற்காய் 2 சிறியது

வெங்காயம் 2 சிறியது

பச்சை மிளகாய் 5

தக்காளி 2 சிறியது

எலுமிச்சை சிறிது

தேவையான உப்பு

தேவையான மிளகு தூள்

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

பாவற்காய், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நன்றாக கழுவி வட்ட வடிவில் மிக மெல்லியதாக வெட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

பின் பாவற்காயை நன்கு கொதிக்கும் எண்ணெயில் இட்டு பொறித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பொறித்த பாவற்காயுடன் ஏனையவெட்டி வைத்த மரக்கறிகளை கலந்து உப்பு மிளகு தேவைக்கு ஏற்றாற் போல சேர்த்து பின் எலுமிச்சம் பழச்சாறும்  சேர்த்து  பரிமாறலாம் .

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்