செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இஸ்ரேல் – ஈரான் மோதலால் யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

இஸ்ரேல் – ஈரான் மோதலால் யாழில் எரிபொருளுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

0 minutes read

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான வான்வழி மோதல்கள் அதிகரித்துள்ளன.

இதனால் எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர்.

இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

மேலும், தேவையான அளவு எரிபொருள் உள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்று அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.