செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு Amazon நிறுவனரின் ஆடம்பர திருமண நிகழ்வுகள் இத்தாலியில்! (படங்கள்)

Amazon நிறுவனரின் ஆடம்பர திருமண நிகழ்வுகள் இத்தாலியில்! (படங்கள்)

1 minutes read

Amazon நிறுவனரும் பணக்காரருமான ஜெஃப் பேஸோஸின் திருமண ஏற்பாடுகள் இத்தாலி – வெனிஸ் நகரில் 3 நாட்கள் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகின்றன. முன்னாள் செய்தியாளர் லாரன் சான்ச்செஸ்ஸை அவர் திருமணம் கொள்ளவிருக்கிறார்.

அதில் கலந்துகொள்ள உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்கள் வெனிஸ் சென்றடைந்துள்ளனர். Microsoft நிறுவனர் பில் கேட்ஸ் , ஒப்ரா வின்ஃப்ரே மற்றும் லியனார்டோ டிக்காப்ரியோ உள்ளிட்டோர் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். கிட்டத்தட்ட 250 பிரபலங்கள் அதில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (27) ஆரம்பமான திருமண நிகழ்வுகள், 3 நாட்களாக இன்று (29) வரை நீட்டிக்கின்றது. இந்நிகழ்வுகளுக்காக சுமார் 56 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வெனிஸ் நகருக்கு கிடைத்த வருவாய்

Amazon நிறுவனர் ஜெஃப் பேஸோஸின் ஆடம்பர திருமண நிகழ்வினால் வெனிஸ் நகரம் ஒரு பில்லியன் டொலர் சம்பாதித்துள்ளதாக நம்பப்படுகிறது. அது ஆண்டுதோறும் சுற்றுப்பயணிகளால் கிடைக்கும் வருவாயில் 68 சதவீதம் என்று CNN செய்தி கூறுகிறது.

திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல்கள், ஏனைய இடங்கள் வழி 33 மில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை தெரிவிக்கிறது. விருந்தினர், மணமக்கள், நிருபர்கள் ஆகியோரை ஆங்காங்கே அழைத்துச் செல்வதன்வழி போக்குவரத்துத் துறை 20 மில்லியன் டொலர் பயனடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விருந்தினரும் ஊடகத்துறையினரும் எடுத்த படங்கள் வழி நகருக்கு 650 மில்லியன் டொலர் விளம்பரம் கிடைத்துள்ளது.

எதிர்ப்பு நடவடிக்கை

எனினும், ஜெஃப் பேஸோஸ் மற்றும் முன்னாள் செய்தியாளர் லாரன் சான்ச்செஸ் ஆகியோரின் 3 நாட்கள் திருமணத்தை எண்ணி உள்ளூர் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். அலைமோதும் சுற்றுப்பயணிகளால் நகரம் ஏற்கெனவே அவதிப்படுகிறது. Amazon நிறுவனர் ஜெஃப் பேஸோஸ் அதை மோசமாக்குவதாக அவர்கள் குறைகூறுகின்றனர். இதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.