இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorisation – ETA) பெறுவது இன்று புதன்கிழமை (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்தவுடன், இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.
கடந்த சில மாதங்களாக, வெளிநாட்டுப் பயணிகள் விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் வருகை விசா (Visa on Arrival) பெறும் வசதியைப் பயன்படுத்தி, 30 நாட்கள் நுழைவு அனுமதியைப் பெற்று வந்தனர்.
இருப்பினும், இன்று முதல் பயணிகள் இலங்கைக்குப் புறப்படுவதற்கு முன், கட்டாயம் இணையம் மூலம் விண்ணப்பித்து, ETA அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.
முன்கூட்டிய ETA அனுமதி இல்லாதவர்களுக்கு விசா தேவைகள் காரணமாக விமான நிறுவனங்களால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படும்.
ETA அனுமதி பொதுவாக சில மணி நேரங்களில் வழங்கப்படுவதால், பயணிகள் புறப்படுவதற்கு முன் இணையம் மூலம் ETA-க்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.