செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு தென்கிழக்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு; மாற்று போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்

தென்கிழக்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு; மாற்று போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்

1 minutes read

இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதிகளில் இன்று (04) ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சிக்னல் கோளாறு மற்றும் ரயில் தடம் புரண்ட சம்பவம் காரணமாக பல ரயில் பாதைகளில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, தென்கிழக்கு இலண்டனின் செல்ஹர்ஸ்ட் பகுதியில் உள்ள ஒரு டிப்போவிற்குள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. அதேவேளை, இலண்டன் பிளாக்ஃப்ரியர்ஸ் மற்றும் நோர்வுட் சந்திப்பு இடையே சிக்னல் தொடர்பான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்களின் விளைவாக இலண்டன் பிரிட்ஜ் மற்றும் ஈஸ்ட் கிரின்ஸ்டெட் இடையேயான ரயில் பாதை, ஆர்பிங்டன் – லூட்டன் வழித்தடம், பிரைட்டன் – கேம்பிரிட்ஜ் சேவை, மேலும் பெட்ஃபோர்ட் மற்றும் 03 பாலங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சேவைகள் தாமதமடைய வாய்ப்புள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளதுடன், பயணிகள் மாற்று போக்குவரத்து முறைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், காலையில் வழங்கப்பட்ட “பயணம் செய்ய வேண்டாம்” என்ற அறிவுறுத்தல் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டாலும், பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கும் முன் ரயில் இயக்க நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கேட்விக் விமான நிலைய ரயில் நிலையம் (Gatwick Airport Station) தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், அங்கு செல்லும் பயணிகள் கூடுதல் நேரத்தை ஒதுக்கி வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக இலண்டன் பேருந்துகள், இலண்டன் நிலத்தடி ரயில்கள் (Underground), எலிசபெத் லைன் (Elizabeth line) மற்றும் பிற மாற்று ரயில் சேவைகளில் டிக்கெட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தடம்புரண்ட ரயிலைச் சரிசெய்யும் பணியில் தற்போது பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தடங்கல்கள் இன்று முழுவதும் தொடர வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.