மகளிர் தினத்தையொட்டிமகளிர் தினத்தையொட்டி

சர்வதேச மகளிர் நாளில் த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை, கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கருத்தமர்வையும் மாவட்டத்திற்கான பெண்கள் அணி அங்குரார்பணத்தையும் செய்திருக்கின்றது.
பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கருத்தமர்வினை யாழ். பல்கலைக்கழக மாணவி நிதர்சா ஏற்று நடத்தினார். நிகழ்வில், வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுதுறை அமைச்சர் த.குருகுலராஜா, உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், வலிமேற்கு பிரதேசசபை தலைவர் திருமதி நாகரஞ்சினி, கரைச்சி பிரதேசசபை தலைவர் நாவை.குகராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அத்தோடு கிளிநொச்சி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் வேழமாலிகிதன், பிரதே சபை உறுப்பினர்கள், கிராம பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

arivakam_womens_002

arivakam_womens_005

arivakam_womens_007 (1)

arivakam_womens_008

arivakam_womens_009

arivakam_womens_010 (1)

ஆசிரியர்