கவர்ந்திழுக்கும் கண்களைப் பெற!!கவர்ந்திழுக்கும் கண்களைப் பெற!!

நம் முகத்திலேயே பளிச்சென்று, பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் முதல் விஷயமே கண்கள்தான். ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை, நம்மில் பலர் சரியாகப் பராமரிப்பதில்லை.

அதனால்தான், நாம் எவ்வளவு அழகாக மேக்கப் போட்டாலும், கண்கள் சோர்வாகத் தெரிந்தால் முக அழகே அடிபட்டு விடுகிறது.

சில சமயங்களில் கண்கள் உப்பி விடுவதற்கும், அல்லது சிவந்து போவதற்குமான காரணங்கள்.

கம்ப்யூட்டர் அல்லது புத்தகங்கள் போன்ற நுணுக்கமான விஷயங்களை அதிக நேரம் பயன்படுத்துவது.

சரியான தூக்கம் இல்லாதது

1_acidlullaby

இதைத் தவிர கண்களில் வரும் பொதுவான பிரச்னைகள்

பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை கண்களுக்குக் கீழே ஏற்படும் கருவளையம் தான். கண்களுக்கு அடியில் பை போல் சதை தொங்குவதும் மற்றொரு பிரச்னை. டென்ஷனான வாழ்க்கை முறை கருவளையம் ஏற்பட முக்கியக் காரணம். நல்ல சரிவிகித உணவு சாப்பிடாதது, தூக்கமின்மை, தண்ணீர் சரியாக குடிக்காததும் மற்ற காரணங்கள். தவிர, சைனஸ் பிரச்சனைகள், தண்ணீரால் ஏற்படும் இன்பெஃக்ஷன், சைனஸ், ஆஸ்துமா, அலர்ஜி, போன்றவற்றால்கூட, கண்கள் உப்பிப் போவது மற்றும் கண்களுக்கு அடியில் பை போன்று தொங்கும் பிரச்னைகள் வரலாம். சிலருக்குப் பரம்பரையாகக்கூட, இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம்

ஆசிரியர்