செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் பெரும் வரவேற்பைப் பெற்ற வன்னி தமிழ் பெண் மதுசா நிருஷாந்தனின் ஆடைவடிவமைப்பு [படங்கள் இணைப்பு]பெரும் வரவேற்பைப் பெற்ற வன்னி தமிழ் பெண் மதுசா நிருஷாந்தனின் ஆடைவடிவமைப்பு [படங்கள் இணைப்பு]

பெரும் வரவேற்பைப் பெற்ற வன்னி தமிழ் பெண் மதுசா நிருஷாந்தனின் ஆடைவடிவமைப்பு [படங்கள் இணைப்பு]பெரும் வரவேற்பைப் பெற்ற வன்னி தமிழ் பெண் மதுசா நிருஷாந்தனின் ஆடைவடிவமைப்பு [படங்கள் இணைப்பு]

1 minutes read

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் சென்னை பேஷன் வீக் இந்தவருடம், இம்மாதம் 11, 12 ம் திகதிகளில் சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகில் நாளுக்கு நாள் பல புதிய ஆடை வடிவமைப்பை அறிமுகப்படுத்தும் பிரபல வடிவமைப்பாளர்கள் உலகின் பல பாகங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற இன் நிகழ்வில் 8 டிசைனர்ஸ் கலந்துகொண்டுள்ளனர். விஜய் டிவி தொகுப்பாளினி டி.டி, நடிகை சோனியா அகர்வால் போன்ற நட்சத்திரங்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்தியாவில் முன்னணி டிசைனரில் ஒருவரான ரிதிகுமாரின் ஆடை வடிவமைப்பும் இதில் இடம்பெற்றது.

இதில் பெருமைப்படவேண்டிய விடயம் என்னவென்றால் இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாக கொண்ட தமிழ் பெண்  மதுசா நிருஷாந்தனின் ஆடைவடிவமைப்பும் இடம்பெற்றது மட்டுமின்றி எல்லோரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. மதுசா நிருஷாந்தனின் ஆடைவடிவமைபுக்கு ஷோ ஸ்ரொப்பராக நடிகை சோனியா அகர்வால் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் இருந்து முதன் முதலாக சென்னை பேஷன் வீக் நிகழ்வில் மதுசா நிருஷாந்தன் கலந்து கொண்டு உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழ் பெண் என்ற பெருமையை தட்டி செல்கின்றார். இவர் மேன்மேலும் வளர்ந்து முன்னேற வணக்கம் லண்டன் வாழ்த்துகின்றது.

ஆடை வடிவமைப்பாளர் மதுசா நிருஷாந்தன் தொலை பேசி எண் 0094 775940066 | mathufashion@gmail.com

மிதுனா சுரேஷ்குமார் | வணக்கம் லண்டன்க்காக

11694010_415242908678209_484936555513636148_n 11235049_415212578681242_8970657842946666552_n 10407753_415452185323948_3490874632768487470_n 11698689_415451985323968_5414692058851892080_n 11745725_415431611992672_2105365413682301916_n 11225172_415452235323943_8123094178826170363_n 11053423_415451851990648_7767190847283537925_n 11695998_415451848657315_4292364890762865592_n 11702826_415431738659326_8254358643409735337_n 11745531_415431621992671_3792787948046424674_n 11233779_415431605326006_4558305603847026194_n 11692674_415097672026066_2253633569916077728_n

படங்கள் | Galatta, lifeandtrendz.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.