புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் இரவில் தூங்குவதற்கு முன்பாக சருமத்தை பராமரிப்பது அவசியமா…?

இரவில் தூங்குவதற்கு முன்பாக சருமத்தை பராமரிப்பது அவசியமா…?

1 minutes read

முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்குவதற்கு நீங்கள் தினமும் உங்கள் சருமத்தை கவனித்துக்கொண்டாலே போதும். தூங்க செல்லும் முன் சருமத்தை  பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகிவிடும்

இரவில் தூங்க செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஆனால் முகத்தை அதிகமாக அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். அது சருமத்தில் உள்ள துவாரங்கள் திறக்க வழிவகுப்பதுடன் அதிலிருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றி விடும்.

இரவில் தூங்குவதற்கு முன்பாக சில பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் அவையே முகத்தை சீராக வைக்கும். மேக்கப் போட்டிருந்தால், எண்ணெய் தன்மை கொண்ட கிளிசரினை பயன்படுத்தி முதலில் மேக்கப்பை நன்கு நீக்க வேண்டும். அதன் பின் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.

வாரம் இருமுறை முகத்திற்கு நீராவி பிடிப்பது மிகவும் நல்லது. அது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் மற்றும் தூசுகளை நீக்கிவிடும். ஈரமான தலையுடன்  தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தலைமுடி பிசுபிசுப்பு தன்மையுடன் மாறி, மயிர்கால்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

தலைமுடியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள் தலைமுடியை தளர்த்தி  கட்டிக்கொள்வது நல்லது.

தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். அது உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. மேலும் கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கும். மேலும் முகம் சோர்வடைவதும் தடுக்கப்படும்.

 

நன்றி : வெப்துனியா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.