Wednesday, March 3, 2021

இதையும் படிங்க

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு | பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

உடல், மன ஆரோக்கியம் அனைவருக் கும் அவசியம். ஆனால், வீடு, வேலை என றெக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கும் பல பெண்களுக்கும், தங்கள் உடல், மன ஆரோக்கியத்துக்கு அரை மணி நேரம்கூட...

கர்ப்பகாலத்தில் சொத்தைப் பல்லைப் பிடுங்கலாமா?

பொதுவாக கர்ப்ப காலத்தில் பல் பராமரிப்பு மிகவும் அவசியம். ஆனால் இந்த நேரத்தில் * எந்தவித ஊடுக்கதிர் (எக்ஸ்ரே)...

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் பிரசவத்தை கடினமாக்கும்!

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம்...

தாய்ப்பாலுக்குப் பதிலாக எவ்வெவற்றின் பால்கள் உலகெங்கும் ஊட்டப்படுகின்றன?

பச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப்...

குதிகால் வெடிப்புக்கு தீர்வு தரும் எலுமிச்சை!

பெண்களில் பாத அழகை கெடுப்பதில் குதிகால் வெடிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் சிறந்த வழி...

அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்காக

அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக்...

ஆசிரியர்

தாய் சேய் பாதுகாப்பு

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும். இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு கொண்டவை. தாய் உட்கொள்ளும் உணவுகள் கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் கர்ப்பிணிகள் திரவ உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும். இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன அதிகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதாவரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து குடிக்கவேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த கால கட்டத்தில் சிசுவின் உடலில் கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சி நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது. இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை ஆசைப்பட்டு கேட்க நேரிடும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.

இக்காலக் கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. இதனால் அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும். இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.

கொழுப்பு, காரம், உப்பு மற்றும் நீரைச் சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு துளசியை உட்கொண்டு வந்தால் பிரசவ வலி குறையும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் மனதாலும், உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும், கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

  • கர்ப்பிணி பெண்கள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள்,பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே மாத்திரைக்கு பதில் அதற்கு ஈடான காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ளவேண்டும். அதிக சூடு, அதிக      குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜுஸ் செய்து கூட அருந்தலாம்.
  • கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்தவேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது.சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)

நன்றி : கீற்று இணையம்

இதையும் படிங்க

பெண்களே கோபம் வராமல் தடுக்க வழிமுறைகள்!

கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க...

முகப்பரு, கரும்புள்ளிகள் இல்லாத சருமத்தை பெற வேண்டுமா? .

இந்த மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். முந்தைய காலங்களில் பெண்கள் மஞ்சள் தூள்,...

உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா..

சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும், சிலருக்கு உதடுகள் வறண்டு இருக்கும். உங்கள் உதட்டை இயற்கை முறையில் அழகாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

கைகளின் வறட்சியை போக்க சில அற்புத வழிகள்!

சிலருக்கு கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். இதற்கு கிரீம்களை விட இயற்கை முறையின் மூலம்...

சரும அழகை பராமரிக்க உதவும் இயற்கை முறையிலான ஃபேஷியல் முறைகள்!

ஆலிவ் ஆயில் சருமத்தை மென்மையாக்க உதவுவதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும். ஆகவே தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து மறுநாள்...

சுத்தமான சமையலறையிலிருந்து தொடங்குகிறது குடும்பத்தின் ஆரோக்கியம்!

நம் குடும்பத்தின் ஆரோக்கியம் சமையலறையில் இருந்துதான் தொடங்குகிறது. அதேபோல, வீட்டின் பாதுகாப்பிலும் கிச்சன் பராமரிப்புக்கு பங்குண்டு. உங்கள் வீட்டுக் கிச்சனை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 25 | பத்மநாபன் மகாலிங்கம்

கிராம வாழ்க்கை சிறந்ததா? நகர வாழ்க்கை சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய இளைஞர்கள் "நகர வாழ்க்கையே சிறந்தது" என்று உடனடியாக பதில் சொல்வார்கள். உழவன் சேற்றில் வெறும் காலுடன் நடப்பதை...

பிறந்த நாள் பரிசு | சிறுகதை

“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?” “இல்ல.....

குப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ

கண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்...

கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் - கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

துயர் பகிர்வு