செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்க வைக்கும் பழங்கள்!

இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்க வைக்கும் பழங்கள்!

1 minutes read

உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொண்டுவர, சில அற்புதமான பழங்கள் கை கொடுக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.

தர்பூசணி: இந்த நீர்ச்சத்து நிறைந்த பழம், சருமத்திற்கு ஈரப்பதத்தையும், புத்துணர்வையும் அள்ளிக் கொடுக்கும். குறிப்பாக, எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பருப் பிரச்சனை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முகம் ஜொலிக்கத் தொடங்கும்.

ஆரஞ்சு: சரும அழகுக்கு ஒரு மாயாஜாலம் செய்யும் பழம் ஆரஞ்சு. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். சரும அரிப்பு, வியர்வை போன்ற பிரச்சனைகளில் இருந்தும் காத்திடும்.

அவகேடோ: வைட்டமின்கள் (E, A, C, K, B6), நியாசின், ஃபோலேட் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த பழம் அவகேடோ. இவை சருமத்தின் உள் அடுக்கிலிருந்து ஆரோக்கியமான வளர்ச்சியைத் தூண்டி, அழகைப் பன்மடங்கு மெருகேற்ற உதவும்.

எலுமிச்சை: எலுமிச்சை சருமத்திற்குப் பளபளப்பு தருமா என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இதில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் வைட்டமின் சி, உடலின் நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தைப் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. இது சரும அழகை மேம்படுத்தும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.