Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் என்ன தவம் செய்தேன் | பேராசிரியர் சி. மௌனகுரு

என்ன தவம் செய்தேன் | பேராசிரியர் சி. மௌனகுரு

9 minutes read

இங்கிவரை  நான் பெறவே  என்ன தவம் செய்து  விட்டேன்.  அவர்களின்  அண்மைய  குழப்படி

  மிகுந்த  நன்றி  மாணவர்களே

——————————————————————

அரங்க  ஆய்வு கூடம் 2012 இல்  ஆரம்பித்துத்  தீவிரமாக  அது  இயங்கிய காலங்கள்  ஞாபகம் வருகின்றன,    அது உருவான விதம், 

அப்போது  அதில்  வந்து   சேர்ந்த புதுப்  புது   மாண்வர்கள். 

 ஒவ் வொரு  சனியும் ஞாயிறும்  காலையில்   அம்மாணவர்கள்  அவ்வரங்க  ஆய்வு   கூடம் நோக்கி  வந்தமை. 

 அவர்களே   அதன் உள்புறமும்  வெளிப்புறமும்  கூட்டிபெருக்கித்   துப்புரவு செய்தமை 

அது  அவர்களின்  சொந்த  வீடாக மாறி யமை.  அங்கிருந்த  குசினி  அறையில்  அவர்களே  தேநீர்  தயாரித்து  எனக்கும்  தந்து  அவர்களும்  அருந்தியமை.  சில வேளைகளில்  ஒன்றாக  இருந்து  மதிய  உணவு  உண்டமை 

போன்ற  அந்தக் காலங்களை  அவர்களும்  மறக்க  மாட்டார்கள்  நானும்  மறக்க மாட்டேன்

  ஒரு குடும்பமாக  ஆரங்க  ஆய்வு  கூட மாணவ்ர்களும்  அவர்கள்  வீடாக  அரங்க  ஆய்வுகூடமும்  இருந்த  காலங்கள்  அவை

அங்கு   மாணவர்  பெற்ற   அரங்கப் பயிற்சிகள்,

 அங்குநடந்த   காத்திரமான  உரையாடல்கள்,

  அங்கு காண்பிக்கப்பட்ட  காத்திரமான   படக் காட்சிகள்,

 அங்கு நடைபெற்ற  ஓவியக் கண்காட்சிகள்,

அறிஞர்களை  நினைவு   கூர்ந்த நாட்கள்,

   அங்கு  வருகை  தந்த பல்வேறு துறைசார்  அறிஞர்களின்  உரைகள்

உலக  நாடக தின விழா நிகழ்வுகள்

  தினமும்  காலை 5.30  தொடக்கம் 7,30  வரை நடைபெற்ற  கூத்துப்  பயிற்சிகள்

பயிற்சியை  முடித்த  கையோடு  அவசர  அவசரமாக  பல்கலைக் கழக  விரிவுரைகளைக்கு  அவர்கள் பறந்து  சென்றமை

அதனூடாக  உருவான  நாடகங்கள்

நாடகங்கள்  நிகழ்த்த  பல ஊர்களுக்கும்  அனைவரும்  சேர்ந்து  நடத்திய  பிரயாணங்கள்

அதில்  மகிழ்ந்த  அனுபவங்கள்

  கலைஞர்   கௌரவிப்புகள் 

 அங்கு வந்த  உரை நிகழ்த்திய  அறிஞர்கள்,

  அங்கு நடைபெற்ற இசைக்கச்சேரிகள்

 அரங்க  ஆய்வுகூடத்  தயாரிப்புகள்

 எனப்  பல ஞாபகங்கள்  எழுந்து மடிகின்றன.

அதில் முன்னின்று  உழைத்த  பல மாணவர்  இன்று  தம் தம் ஊர்களில்  இருந்து  அரங்க  சமூகப் பணிகள்  கல்விப் பணிகள்  செய்து  கொண்டிருக்கின்றனர்.

ஆனால்  பிரதேசம்  பிரதேசமாகப்  பிரிந்து  கிடக்கின்றனர்

 எனினும்  அரங்க ஆய்வுகூடம்  என்ற  இந்த  ஸ்தாபனம்  இன்று   திக்காலுக்குத் திக்கால்  பிரிந்து  கிடக்கும்  இவர்கள்  அனைவரையும்  இணைக்கும் மந்திர  வலி பெற்றிருக்கிறது  என்பதை  அண்மையில்

   கண்டேன்,

 உணர்ந்தேன் 

மகிழ்ந்தேன்

பிரதேசம்   பிரதேசமாகப்   இன்று  பிரிந்து   கிடக்கும்  அவர்கள்  அரங்க ஆய்வுகூடம் எனும் குடையின் கீழ் ஒன்றிணைந்து  சில செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்

இதற்கு  ஆதார  சுருதியாக இன்னும் இருப்பவை  நாடகத்தின் மீது

 நடனத்தின்மீது

 இசையின் மீது

நமது  பண்பாட்டின்  மீது  அவர்கள்  கொண்ட  பெருவிருப்பும்  மானுடத்திற்கு  அதன் மேம்பாட்டிற்கு  இதன் மூலம்  ஏதேனும்  செய்ய வேண்டும்  என்ற  அவர்களது    தணியாத  தாகமுமே

எனது பிறந்த  நாளைக்கொண்டாடுமுகமாக  ஒன்று  திரண்ட  அவர்கள்  தம்மை  அரங்க ஆய்வுகூடம் எனவே  அடையாளப்படுத்திக்  கொண்டமை எனக்கு  பேரானந்தம் தந்தது

.இதற்கு  அவர்கள்  என்னிடம்  அனுமதி கூடக் கோரவில்லை

அப்பாவிடம்  என்ன  அனுமதி  என  அவர்கள் உரிமையோடு  நினைத்தனர்  என நினைக்கிறேன்

இந்த உரிமை  எனக்கு  மிகவும்  பிடித்திருந்தது

  சென்ற  வாரம் என்னைத் தொலைபேசியில்  அழைத்த  அவர்கள்  ஒன்பதாம்  திகதி   புதன்கிழமை  காலை  9.00  மணி தொடக்கம் 11.00  மணிவரை  நேரம் ஒதுக்கி  அந்த இரண்டு மணிநேரமும்  தம்முடன்  உரையாட  வேண்டும்  என வேண்டிக்கொண்டதுடன்  உள் நாட்டிலிருந்தும்  கடல்  கடந்த  நாடுகளிலிருந்தும்  அரங்க  ஆய்வுகூடத்துடன்  தொடர்புடைய  பிறரையும் அழைத்திருந்தனர்

என்னடா  செய்யப்போகிறீர்கள்

  எனக் கேட்டேன்

வாருங்கோ  சேர்  எல்லாம் சஸ்பென்ஸ்

 என்று ஒரே  வார்த்தையில்  கூறிவிட்டார்கள்

என்ன செய்யபோகிறோம்  என எனக்கு   அவர்கள்  அறிவிக்கவேயில்லை.

நானும்  அவர்களின் குழப்படியை  ரசிக்க ஆயத்தமானேன்

என்னை முழு  மகிழ்ச்சியில்  ஆழ்த்துவதே  அவர்களின் முக்கிய  நோக்கமாக  இருந்தது.

குழப்படியின்  முதற்படி முதல் நாள்  ஒரு மாணவன்  அன்றைய  கொண்டாட்ட  நிகழ்வுகளுக்கு  வரும்படி   அழகாக  வேடம்  அணிந்து    நாடக பாணியில் அனைவரையும்  அழைத்தமையாகும்

புதிய   புதிய நிகழ்வுகளை   அவர்கள் அளித்தனர்

 நீண்ட  காலத்தின் பின் அனைவரையும்  ஓருங்குசேர  அன்று  கண்டேன்,

 அவர்கள்  மாத்திரமல்ல  அதற்குமுன் என்னோடு  நாடகம் செய்த  ஏனையமாணவர்களையும்  அழைத்திருந்தனர் 

பேசவிட்டனர்

 ஒரே  கொண்டாட்டம்தான்

இதற்காக  அவர்கள்  பலநாட்கள் செலவழித்து  இணைய மூலம் இணைந்து  செயற்பட்டிருந்தனர்  என்பதைப்பின்னர்   அறிந்தேன்

  நான்  ஒரு முறை  மலை  நாட்டுக்குக்  கந்தகெட்டிய  சென்றிருந்த போது ஓர் இரவு  முழுதாக  அம் மலையக  மக்களோடு  இருந்து  காமன் கூத்துப்  பார்த்தேன்.

அங்கு  அவர்கள்  பல வீடுகளுக்கு  என்னை அழைத்துசென்றனர்

அங்குதான்  நான் ஓர் பெரும்  பறையிசைக்  கலைஞரைச்  சந்தித்தேன்.

 அற்புதமான  அவர் பறை வாசிப்பில்  மயங்கினேன்

மறு நாள்  காமனின்   இறப்பை  நினைத்து   அவ்வூரார்  நடத்திய    காமனின் காடாத்துச்  சடங்கிலும்  பங்கு கொண்டு மீண்டேன்

அம்மக்கள்  என்னை மறக்வேயில்லை

கந்தகெட்டிய  மலை  மக்கள் தம் வாழ்த்தையும் அன்பையும்   அந்தப்  பழைய  நினைவுகளையும்  ஓர் ஆவணப்படம்  மூலம்   எனக்குத் தெரிவித்தமை  மிக மகிழ்ச் சியளி த்தது

. மிகச்சாதாரண  மக்கள் மிக  மிகப்பெரியர்

 தினையளவு   உதவி செய்யினும்  அதனை  அவர்கள்  பனையளவு நினைக்கும்  பண்பினர்

.அது  உழைப்பாளி மக்களுக்கே  உரிய   உன்னத பண்பு

நான்   மாணவருடன்  இணைந்து  நடத்திய  பயிற்சிப்பட்டறைப் படங்களைத்தேடி  எடுத்து  அழகாகத் தொகுத்து  ஓர் ஆவணப் புகைப்படத் தொகுப்பாக  இசைபின்னணியில்   சிலர் தந்தனர்,

நானே  மறந்துபோன பல படங்களை  அங்குகண்டு  அசந்து போனேன்

  அன்றைய  கொண்டாட்டத்தில்  என் மனைவியும்  என் மகனும்  மருமகளும் கூடப்  பங்குகொள்கிறார்கள்  என்பதைக்கூட அனைவரும்   எனக்கு திட்டமிட்டு   மறைத்து விட்டனர்

அவர்கள் இணையத்தில் தோன்றி  எனக்கு   வாழ்த்துரைக்கும் போதுதான்  எனக்கு  அது தெரியவந்தது

    எத்தனை  பெரிய   சதி

. அன்று காலையில்  எனக்கு    சிங்கப்பூரிலிருந்து பிறந்த   நாள் வாழ்த்துரைத்த என் மகனும்  மருமகளும்  இது பற்றி எனக்கு எதுவுமே கூறவில்லை, இப்படியான  நிகழ்வுகளில் அதிகம்  பங்குகொள்ளாத அவர்களைக் கூட  வளைத்துபிடித்துகொண்டுவந்திருந்தனர்  இக்குழப்படி கார மாணவர்கள்

அந்தப்பருவம்  அத்தகையது  அதனை நான் இழந்து விட்டேன்  என்பது  எனது இன்றைய  துயரம். மீள  அது வராது

எனக்கு  ஓர் வெப்  சைட்  உருவாக்கியிருந்தனர்

 அதனை   முக்கால் வாசி  முடித்து பூர்வாங்க  வேலைகளை  அறிமுகம் செய்து  அதனை விரைவில் திறக்க  விருப்பதாக கூறி என்னை மேலும்  மேலும் ஆச்சரியத்திலாழ்த்தினர்

அதற்கு  அவர்களே  மௌனசித்தன்  எனப் பெயர் வைத்திருந்தனர்

இந்த  கொண்டாட்ட  நிகழ்வைப்  பார்த்த  சிலர் என் உள்பெட்டியிலும்  வாட்ஸ் அப்பிலும்  எனக்கு சில குறிப்புகள்  அனுப்பியிருந்தனர்

ஒருவர்  பின்வருமாறு  எழுதியிருந்தார்

” உங்கள்  மீது பேரன்பும்  பக்தியும்  பற்றும் மிகுந்த திறனும்   கெட்டித்தனமும் மிகுந்த  அருமையான    மாணவர்களை நீங்கள்  பெற்றிருக்கிறீர்கள்”

உண்மைதான்

  நான் மிக

 மகிழ்கிறேன்

 நெகிழ்கிறேன்,

மிக்க நன்றி  என் அன்பு  மாணவர்களே

இங்கிவரை  நான் பெறவே  என்ன  தவம் செய்து  விட்டேன்

அனபுடன்

மௌனகுரு

—————————————————————-

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More