திருச்சியில் நேற்று 22ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் காவிரிக் கவித்தமிழ் முற்றம் மகாகவி ஆசிரியர் வதிலைபிரபாவுக்கு “மகாகவியின் ஞான நிழல்” விருது வழங்கிப் பெருமை சேர்த்தது. விருதாளருக்கு பொன்னாடை, சந்தனமாலை, ஷீல்டு மற்றும் தகுதியுரை வழங்கப்பட்டன.
நிகழ்வில் தூய வளனார் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, திருச்சி சிரா இயக்கியக் கழகம் தலைவர் கேத்தரின் ஆரோக்கியசாமி, கொச்சின்தமிழ் ஐக்கிய தமிழ் சங்கம் உதவித் தலைவர் நா. அ. பஷீர் அகமது சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.
கவிஞர் ஆங்கரை பைரவி, மகாகவி இணை ஆசிரியர் ம. திருவள்ளுவர், பேராசிரியர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனர். மகாகவி இணை ஆசிரியர் முனைவர் ஜா. சலேத் மற்றும் காவிரிக் கவித்தமிழ் முற்றம் செயல் இயக்குநர் லி. மெர்சி டயானா இருவரும் நிகழ்வினை வெகுசிறப்பாகத் திட்டமிட்டு நடத்தியவிதம் அனைவரின் பாராட்டினைப் பெற்றது.