58
நிர்மூலமாக்கப்பட்ட கனவுகளின் வழியே
நாடற்றவர்களின் வீடாக
கண் சிமிட்டுகிறது
அகதியின் வானம்
முற்றுப்புள்ளியில் இருந்து
முடிவிலியாய் நட்சத்திரங்களை
தொலைத்த வானமது. .!!
செங்கறைகள் படிந்த மேகங்கள்
இடைவிடாது இடம் பெயர்ந்து கொண்டே
இருக்கின்றன..!
அவை பயணம் செய்யும் தேசங்களில்
மழை நீரில் உவர்ப்பின் மிகுதி
கூரை பிளக்கப்பட்ட
வீட்டின் வழியே வானத்தை பார்க்க
எத்தணிக்கும் அகதிச் சனங்களோடு
முட்டி மோதிக்கொள்கின்றன
முட்கம்பிகள்.
-பாலா சயந்தன்