April 1, 2023 5:23 pm

சர்வதேச விசாரணையே அமெரிக்கத் தீர்மானம் | கூட்டமைப்பிடம் உறுதிப்படுத்தினார் ஸ்ரீபன்சர்வதேச விசாரணையே அமெரிக்கத் தீர்மானம் | கூட்டமைப்பிடம் உறுதிப்படுத்தினார் ஸ்ரீபன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்ற அமெரிக்கா முழுமூச்சுடன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.   இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நேற்று நேரடியாகத் தெரிவித்துள்ளார் சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ராப்.

இலங்கை அரசுக்கு எதிராக இந்த சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நாவில் நிறைவேற்றுவதற்காக மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கடுமையான பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பிக்கும் என உலகத் தமிழர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ராப், இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இந்த அதிரடிக் கருத்தை வெளியிட்டுள்ளார்.   இதேவேளை, இலங்கை அரச படைகளினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சு நடத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதற்காக உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஸ்ரீபன் ராப், நேற்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.   அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இரவு நேர உணவுடன் இருமணி நேரம் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்