கிளிநொச்சி A9 வீதியில் வேகமாக வந்த இராணுவ வாகனம் முதியவரை தாக்கியது கிளிநொச்சி A9 வீதியில் வேகமாக வந்த இராணுவ வாகனம் முதியவரை தாக்கியது

கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள சிங்கர் நிறுவனத்தின் முன்னால் காணப்படும் பாதசாரிகள் கடவைக் கோட்டின் நடுப்பகுதியில் கடந்து வந்துகொண்டிருந்த  முதியவர் மீது  வேகமாக வந்த இராணுவ வாகனம் வேகத்தினை கட்டு படுத்த முடியாமல் கடவை பகுதியில் வைத்தே முதியவர் மேல் மோதியது .

முதியவர் சுமார் 10 அடி தூரம் தூக்கிவீசப்பட்டார். பின்னர் அதே வாகனத்திலேயே படுகாயமடைந்த முதியவரை இராணுவத்தினர் ஏற்றி சென்றனர். அதன்  பின்னர் மக்கள் பத்திரிகையாளர்கள் என பெருமளவானோர் அவ் இடத்தில் கூடினர் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், விசாரனைகள் என இடம் பெற்றன. முதியவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை      வழங்கப்பட்டு கொண்டு  இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். மேலதிக விபரங்கள் விரைவில் வெளிவரும்.

ac2

கிளிநொச்சி செய்தி தொடர்பாளர் | வணக்கம்LONDON க்காக 

ஆசிரியர்