சட்ட நடவடிக்கையை தடுக்க தேவயானிக்கு கூடுதல் பொறுப்புசட்ட நடவடிக்கையை தடுக்க தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு

இந்திய துணைதூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகேட் மீது நீதிமன்ற நடவடிக்கையை துவக்கி உள்ள அமெரிக்கா, அவரை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

தேவ்யானிக்கு அளிக்கப்பட்ட தூதர் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள இந்தியா மறுத்ததை தொடர்ந்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

வழக்கில் இருந்து தேவயானியைக் காப்பாற்ற, ஜனவரி 8ம் தேதி, தேவ்யானியை இந்தியாவிற்கான ஐ.நா.,குழுவின் நிரந்தர உறுப்பினராக நியமித்து, அவரது பாதுகாப்பை அதிகரித்தது இந்தியா. தேவ்யானியின் பாதுகாப்பு அதிகரிப்பட்டதை அடுத்து அவரை வழக்கில் இருந்து விடுவிக்கவும் இந்தியா சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், தேவ்யானி கைது செய்யப்பட்ட போது அவர் ஐ.நா., குழு உறுப்பினர் பதவியில் இல்லை எனவும், குறிப்பிட்ட அளவே சலுகைகளை பெற்றிருந்ததாகவும் கூறி அமெரிக்கா, வழக்கை திரும்பப் பெற மறுத்துவிட்டது.

இந்த நிலையில், இன்று அமெரிக்காவில் இருந்து இந்தியா கிளம்பும் தேவயானி, தனது குழந்தைகள் உட்பட குடும்பத்தார் அமெரிக்காவிலேயே தொடர்ந்து இருப்பர் என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்