சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த 6 அடி நீள முதலைசிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த 6 அடி நீள முதலை

crocசிதம்பரம் அருகே ஊருக்குள் புருந்து டீக்கடை முன்பு படுத்திருந்த 6 அடி நீள முதலையை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டையில் கான்சாகிப்வாய்க்கால் ஓரம் பாஸ்கரன் என்பவரது வீடும், வீட்டு முன்புறம் டீக்கடையும் உள்ளது. சனிக்கிழமை காலை பாஸ்கரன் மனைவியும், மகன் சகுபரனும் டீக்கடையை திறக்க வந்து போது கடை வாயில் முன்பு முதலை படுத்திருப்பதை கண்டு அதிரிச்சியுற்று ஓடினர். பின்னர் சகுபரன் சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த நிலைய அலுவலர் ஜகாங்கீர்முகமது தலைமையிலான தீயணைப்பு மீட்புத்துறையினர் அங்கு சென்று 6 அடி நீல முதலையை பிடித்து தங்களது அலுவலகத்திற்கு கொண்டு வந்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் எம்.ராஜேஷ் மற்றும் வனவர்கள் முதலையை பெற்று அருகாமையில் உள்ள வக்காரமாரி நீர்தேக்க ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விட்டன

ஆசிரியர்