April 1, 2023 5:37 pm

கிளிநொச்சியில் ஆரம்பமாகவுள்ள காணாமல் போனவர்களின் வாய்மூல விசாரணைகிளிநொச்சியில் ஆரம்பமாகவுள்ள காணாமல் போனவர்களின் வாய்மூல விசாரணை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வாய்மூல விசாரணை அமர்வுகள் அடுத்த வாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து நான்கு நாட்கள் கிளிநொச்சியில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்னர் இதன்போது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் காணமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி ஸ்கந்தபுரம் இலக்கம் 01 பாடசாலையிலும்;,19 ஆம் திகதி ஐயனார்புரம்; மகாவித்தியாலயத்திலும், 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் நடைபெறவுள்ளதாகவும் இதன் போது மேற்படி பாடசாலைகள் மற்றும் மாவட்டச் செயலகங்களை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த காணமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் முறைப்பாடுகளை பதிவு செய்துகொள்ள முடியும் என மாவட்டச்செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த வருடத்தில் 3 தடவைகள் மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஆணைக்குழுவிற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் வடக்கு, கிழக்கில் காணமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்து.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்