நோயாளியின் ஈரலில் முதலெழுத்துக்களைப் பதித்த சத்திரசிகிச்சை நிபுணர்நோயாளியின் ஈரலில் முதலெழுத்துக்களைப் பதித்த சத்திரசிகிச்சை நிபுணர்

தங்களது பெயரை எங்காவது ஓரிடத்தில் பதித்து விட பலரும் எண்ணுவார். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் அவரது பெயரின் முதலெழுத்துக்களை நோயாளியின் ஈரலில் பதித்துள்ளார்.

ஸிமோன் ப்ரம்ஹோல் என்ற சத்திர சிகிச்சை நிபுணரே நோயாளியின் ஈரலில் முதலெழுத்துக்களைப் பதித்துள்ளார். பெயர் வெளியிடப்படாத நோயாளியின் ஈரலில் நஞ்சற்ற ஆர்கன் வாயுவினால் எஸ்பி என பதித்துள்ளார்.

பின்னர் அந்நோயாளிக்கு மீண்டுமொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் போது சக வைத்தியர் இதனைக் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டு ஸிமோன் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் அண்மையில் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமிலுள்ள குயீன் எலிஷபத் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து வைத்தியசாலையின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறாக நடந்து கொண்டார் என்ற சந்தேகத்தில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலைகள் என்.எச்.எஸ் நம்பிக்கை அமைப்பு சத்திரசிகிச்சை நிபுணரை இடைநிறுத்தியுள்ளது.

ஆசிரியர்