போதை மருந்து வாங்க பணம் தராத மனைவியை தாக்கிய கணவன்போதை மருந்து வாங்க பணம் தராத மனைவியை தாக்கிய கணவன்

drug adict

போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான கணவர் ஒருவர் தனது மனைவியிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்து பணம் தராததால், அவருடைய மூக்கையும், உதடுகளையும் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று ஆப்கானிஸ்தானில் நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹெரட் என்ற பகுதியைச் சேர்ந்த செடரா என்ற பெண் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவரது கணவர் கோகைன் என்ற போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார். அன்று மாலை மனைவியின் நகைகளை போதை மருந்து வாங்க கேட்டுள்ளார். மனைவி மறுக்கவே உடனே கத்தியை எடுத்து அவரின் மூக்கை அறுத்துள்ளார். மேலும் கோபம் அடங்காமல் உதடுகளையும் தனியாக வெட்டியுள்ளார். வலியினால் கதறிய செடரா, பின்னர் மயக்கமடைந்துவிட்டார். இதைப்பார்த்த குழந்தைகள் அலறினர். உடனே கணவர் செடராவின் மொபைலிலிருந்து யாருக்கோ போன் செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டார்.

செடராவின் மகன் காவல்துறையினர்களுக்கு போன் செய்து சம்பவம் குறித்து தகவல் கூறியதால் உடன் விரைந்து வந்த காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கணவனை தேடும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது.

ஆசிரியர்