மன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்புமன்னாரில் சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற சுகாதார சேவை

ஊழியர்கள் இன்று காலை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுமார் 200 இற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இவ் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான இப் பணிபகிஸ்கரிப்பு பகல் 12 மணிவரை இடம்பெறும்.

6-2006 சுற்றறிக்கையை சரியாக அமுல் படுத்த வேண்டும்,

சகல தற்காலிக மற்றும் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்கப்பட வேண்டும்,

8 மணித்தியால காலவரையறைக்கு மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்படும் கடமைகளுக்கான உரிய மேலதிக நேரக்கொடுப்பணவை வழங்க வேண்டும்,

சீருடைக்கொடுப்பணவை ஒரே தடவையில் வழங்க வேண்டும்,

5 நாட்களைக்கொண்ட வேலை வாரத்தை செயற்படுத்த வேண்டும்,

வாராந்த விடுமுறை நாள் ஒழிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்,

பரிசாரகர்களுக்காக ஒரு வருட காலப்பயிற்சியை வழங்க வேண்டும்,

விடுமுறையற்ற பதில் கடமை நியமனங்கள் வழங்குவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.

என்ற 8 கோரிக்கைகளை முன் வைத்து இந்த அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

540054D

ஆசிரியர்