உருகுவேயில் கரையொதுங்கிய 52 அடி நீளமான திமிங்கிலம்உருகுவேயில் கரையொதுங்கிய 52 அடி நீளமான திமிங்கிலம்

52.5 அடி (16மீற்றர்) நீளமான பாரிய திமிங்கிலம் ஒன்று உயிரிழந்த நிலையில் உருகுவே கடற்கரையில் கடந்த வார இறுதியில் கரையொதுங்கியது. பல நாடுகளில் இத்தகைய பாரிய திமிங்கிலங்களின் உடல் கரையொதுங்கும் போது வெடிபொருட்கள் மூலம் தகர்க்கப்பட்டு உடல் அப்புறப்படுத்தப்படும்.

ஆனால் உருகுவே கடற்படையினர் இத்திமிங்கிலத்தினை நீண்ட இழுவை வாகனம் ஒன்றின் மூலம் மற்றோர் இடத்துக்கு கொண்டு சென்று பாரிய குழிதோண்டி புதைத்தனர். சுமார் 25 தொன் எடையுள்ள இப்பாரிய திமிங்கிலத்தின் உடலை பார்ப்பதற்காக பெரும் எண்ணிக்கையான மக்கள் திரண்டமை குறிப்பிடத்தக்கது.

s4

s2

ஆசிரியர்