சிரியாவில் தொடர்ந்து கலவரம்: 1 வாரத்தில் 1000 பேர் பலிசிரியாவில் தொடர்ந்து கலவரம்: 1 வாரத்தில் 1000 பேர் பலி

சிரியாவில் அதிபர் பதர் ஆல் –ஆசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் புரட்சி படைக்கும் இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் வடக்கு சிரியாவில் புரட்சி படையினருக்கும் ஈராக்கை சேர்ந்த ஜிகாதி (புனித போர்) மற்றும் லேவந்த் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடும் மோதல் இடம்பெறுகிறது. இதற்கிடையே ஜிகாதி பிரிவினர் தற்கொலை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் குறிப்பாக  3 ஆம் திகதி  முதல் 11 ஆம் திகதி வரை நடந்த தாக்குதல்களில் 1000 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

பலியானவர்களில்  697 பொதுமக்களும் புரட்சி படையைச் சேர்ந்த 351 பேரும் ஜிகாதி மற்றும் லேவந்த் பிரிவைச் சேர்ந்த 246 பேரும் அடங்குவர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 தற்கொலை தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பலானவை கார் குண்டு தாக்குதல்களாகும்.

ஆசிரியர்