சீனாவில் கடத்தல் கும்பலை பிடிக்க உதவிய 9 வயது போலீஸ் சிறுவன்சீனாவில் கடத்தல் கும்பலை பிடிக்க உதவிய 9 வயது போலீஸ் சிறுவன்

9 years old police boyசீனாவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் ஒருவனுக்கு கவுரவ போலீஸ் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்ற ஒரு சில நாட்களில் மிகப்பெரிய கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க அந்த சிறுவன் உதவியதால் சீன போலிஸார் அந்த சிறுவனை பாராட்டி வருகின்றனர்.

சீனாவில் 9 வயது சிறுவன் ஒருவன் மர்ம நோய் ஒன்றால் அவதிப்பட்டு வந்தான். அவன் இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவான் என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அவனது நீண்ட நாள் கனவான போலீஸ் ஆசையை நிறைவேற்ற அவனது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி நடந்த பேச்சுவார்த்தையில் சீனாவில் கௌரவ போலீஸ் பதவியை ஒரு சில நாட்களுக்கு அந்த சிறுவனுக்கு வழங்க போலீஸார் முடிவு செய்தனர்.

ஒரு நாள் ஜோ ஜூன்யி என்ற அந்த சிறுவன், போக்குவரத்து போலீஸாருக்கு உதவி செய்து கொண்டிருந்த போது மூன்று அப்பாவிகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று வந்து கடத்திய அப்பாவிகளை விடுவிக்க வேண்டுமென்றால் 165,000 பவுண்ட்ஸ் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தது. அந்த கடத்தல் கும்பலுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது கும்பலைச் சேர்ந்த ஒருவன் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். தண்ணீரை கொடுத்த சிறுவன், அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பேசிக் கொண்டுடிருந்த போது போலீஸார் அதிரடியாக தாக்குதல் நடத்தி கடத்தல் கும்பலை சேர்ந்த இருவரையும் பிடித்தனர். மூன்று அப்பாவிகளும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பெரிதும் உதவிய ஜோ ஜூன்யி யை போலீஸார் பாராட்டினர்

ஆசிரியர்