11 கோடி பெறுமதியான தங்க உள்ளாடை – தகதகக்கும் அழகி11 கோடி பெறுமதியான தங்க உள்ளாடை – தகதகக்கும் அழகி

சுமார் 11 கோடி ரூபா விலைமதிப்பு மிக்க இந்த டூபீஸ் உள்ளாடை 3 கிலோகிராம் தங்கத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உயர்தர வடிவமைப்பு விற்பனைக்காக வடிவமைக்கப்படவில்லை.

இந்த உள்ளாடையை மத்திய சீனாவில் ஹ_பேய் மாகாணத்தின் வுஹான் நகரிலுள்ள கோல்ட் ஸ்மித் நிறுவனத்தினால் சுமார் 6 மாதங்கள் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக குறித்த நிறுவனம் சுமார் 5 மில்லியன் யுவான்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உள்ளாடையை மொடல் ஒருவர் அணிந்து கொண்டு கொல்ட் ஸ்மித் காட்சியறையில் கவர்ச்சிகரமாக வலம் வந்து காட்சிப்படுத்தியுள்ளார். அன்றைய நாள் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த டூபீஸ் மற்றும் மொடலினை பலரும் தங்களது தொலைபேசியினூடாக புகைப்படம் எடுத்துள்ளனர். முழுமையாக தங்கத்தினால் ஆடை வடிவமைக்கப்படுவது இது முதற் தடவையல்ல. கடந்த வாரம் துருக்கி நகை வடிவமைப்பாளர் அஹ்மட் அடகான் என்பவர் முழுமையாக தங்கத்தினால் கவர்ச்சிகரமான ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டிருந்தார். இவ்வாடைகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி சுமார் 1.8 கோடி ரூபாவாகும்

ஆசிரியர்