கிளிநொச்சி நகரில் விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான வருடாந்த உதைப்பந்தாட்ட போட்டி (படங்கள் இணைப்பு)கிளிநொச்சி நகரில் விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான வருடாந்த உதைப்பந்தாட்ட போட்டி (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவினுள்  அமைந்துள்ள விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான வருடாந்த உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இடம் பெற்றது.

இப் போட்டியில் மிக பலம் பொருந்திய அணிகளோடு மோதி கரைச்சி பிரதேசசபை கிண்ணத்தை  தனதாக்கி கொண்டது உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம். இப் போட்டி கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.

பெருமளவான ரசிகர்கள் மத்தியில் இறுதி போட்டிக்கு தெரிவான  திருநகர், உருத்திரபுர அணிகள் மோதின. போட்டி விறு விறுப்பாக இடம் பெற்றது. போட்டி முடிவில் உருத்திரபுர அணி வெற்றி பெற்றது. உருத்திரபுர அணியானது இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கு பலம் பொருந்திய அணிகளான  கனகபுரம் அணி,  உளவர் ஒன்றியம், உதயதாரகை போன்றவற்றிற்கு   2,2,1, என்ற கோல்கள் போட்டு வெற்றி பெற்றதென்பது  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

s2

s3

s4

s1

 

 

 

 

ஆசிரியர்