Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் காணாமல்போனோரின் மரணச்சான்றிதழ்களை பெறுமாறு கிளி.யில் உறவுகளுக்கு நிர்ப்பந்தம் | சிறி­தரன்காணாமல்போனோரின் மரணச்சான்றிதழ்களை பெறுமாறு கிளி.யில் உறவுகளுக்கு நிர்ப்பந்தம் | சிறி­தரன்

காணாமல்போனோரின் மரணச்சான்றிதழ்களை பெறுமாறு கிளி.யில் உறவுகளுக்கு நிர்ப்பந்தம் | சிறி­தரன்காணாமல்போனோரின் மரணச்சான்றிதழ்களை பெறுமாறு கிளி.யில் உறவுகளுக்கு நிர்ப்பந்தம் | சிறி­தரன்

1 minutes read

காணாமல் போனோரைக் கண்­ட­றி­வ­தற்­காக ஜனா­தி­ப­தியால் அமைக்­கப்­பட்ட விசேட ஆணைக்­கு­ழுவின் ஏற்­பாட்டில் கிளி­நொச்­சியில் கடந்த மூன்று நாட்­க­ளாக நடை­பெற்ற விசா­ர­ணை­களுக்குச் சென்ற காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வு­களை இரா­ணுவப் புல­னா­ய்வா­ளர்கள், காணாமல் ­போ­ன­வர்­களை மர­ண­ம­டைந்­த­வர்­க­ளாகக் கருதி மரணச் சான்­றி­தழ்­களைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு நிர்ப்­பந்­தித்­துள்­ள­தாக உற­வு­களில் சிலர் எம்­மிடம் முறை­யிட்­டுள்­ளனர்.

இத்­த­கைய செயல்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­கவை என தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் தெரி­வித்தார். இவ்­வி­டயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

காணாமல் போனோரைக் கண்­ட­றி­வ­தற்­காக ஜனா­தி­ப­தியால் அமைக்­கப்­பட்ட  ஆணைக்­கு­ழு­வினர் கடந்த மூன்று நாட்­க­ளாக கிளி­நொச்­சியில் முதற்­கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இந்த விசா­ர­ணை­க­ளுக்குச் சென்ற காணாமல் போன­வர்­களின் உற­வு­களை இப்­ப­தி­வுகள் நடை­பெற்ற நிலை­யங்­க­ளுக்கு வெளியில் காத்­தி­ருந்த அர­சாங்க ஆத­ர­வா­ளர்­களும், இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­களும் காணாமல் போன­வர்­களை மர­ண­ம­டைந்­த­வர்­களாக் கருதி மரணச் சான்­றி­தழ்­களைப் பெற்றுக்கொள்­ளு­மாறு நிர்­ப்பந்­தித்­­துள்­ளனர்.

இத்­த­கைய பதி­வு­களை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்கு இர­ணை­ம­டுவில் வைத்து ஒரு­ இ­லட்சம் ரூபா பெறு­ம­தி­யான காசோ­லை­க­ளையும் வழங்­கி­யுள்­ளனர்.

மேலும், இவ்­வாறு மரணச்சான்­றி­தழ்­களைப் பெறு­கின்­ற­வர்­க­ளுக்கு பணமும் வேறு­வ­கை­யான உதவிப் பொரு­ட்­க­ளையும் பெற்றுத்தரு­வ­தா­கவும் அவர்கள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர். சிலரை நிர்ப்­பந்­தித்­து­முள்­ளனர்.

இவ்­வி­டயம் தொடர்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.

காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்கள் தமது உற­வு­களை தேடியலை­கின்ற நிலையில் சிலர் இத்­த­கைய ஏமாற்று வேலை­களில் ஈடு­ப­டு­கின்­றமை வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­கது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More