Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக முதல் தட­வை­யாக பெண் தெரிவுமத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக முதல் தட­வை­யாக பெண் தெரிவு

மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக முதல் தட­வை­யாக பெண் தெரிவுமத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக முதல் தட­வை­யாக பெண் தெரிவு

1 minutes read

மத்­திய ஆபி­ரிக்கக் குடி­ய­ரசின் இடைக்­கால தலை­வ­ராக பான்­குயி நகர மேயர் கத்­தரீன் சம்பா பன்ஸா (59 வயது) தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். அந்­நாட்டில் மேற்­படி பத­விக்கு பெண் ஒருவர் தெரிவு செய்­யப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும்.

இடைக்­கால பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற இரண்டாம் சுற்று வாக்­கெ­டுப்பில் பன்ஸா தனது போட்டி வேட்­பா­ள­ரான டிஸயர் கொலிங்­பாவை தோற்­க­டித்து வெற்­றியை தன­தாக்கிக் கொண்டார்.

இந்நிலையில் மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசில் முஸ்­லிம்­க­ளுக்கும் கிறிஸ்­த­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான வன்­மு­றைகள் இடம்­பெ­று­வது அதி­க­ரித்து வரு­கி­றது.

பான்­கு­யிலில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்பெற்ற வன்­மு­றை­களில் இரு முஸ்லிம் ஆண்கள் படு­கொலை செய்­யப்­பட்டு எரி­யூட்­டப்­பட்­டனர்.

தனது வெற்­றி­யை­ய­டுத்து பன்ஸா உரை­யாற்­று­கையில், கிறிஸ்­தவ போரா­ளி­களும் முன்னாள் செலெகா கிளர்ச்சி இயக்­கத்தைச் சேர்ந்த முஸ்லிம் போரா­ளி­களும் மோதல்­களை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

கிறிஸ்­த­வ­ரான பன்ஸா வெற்­றி­க­ர­மான வர்த்­தக பிர­மு­க­ரா­கவும் திகழ்ந்து வரு­கின்றார்.

மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ர­சுக்கு படைகளை அனுப்புவதற்கு ஜரோப்பிய ஒன்றிய வெளி நாட்டு அமைச்சர்கள் இணக்கம் கண்டுள்ள நிலையிலேயே அவரது தெரிவு இடம் பெற்றுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More