தமி­ழர்­களின் கல்விச் செயற்­பா­டு­களைக் கட்­டி­யெ­ழுப்ப முயற்­சிக்க வேண்டும் | சி.வி.விக்கினேஸ்­வரன்தமி­ழர்­களின் கல்விச் செயற்­பா­டு­களைக் கட்­டி­யெ­ழுப்ப முயற்­சிக்க வேண்டும் | சி.வி.விக்கினேஸ்­வரன்

கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் அனு­ப­வித்­து­வந்த துன்­ப­து­ய­ரங்­க­ளி­லி­ருந்து படிப்­ப­டி­யாக விடு­பட்டு வரு­கின்­றார்கள். இந்த நிலையில் தமி­ழர்­களின் கல்விச் செயற்­பா­டு­களைக் கட்­டி­யெ­ழுப்ப முயற்­சிக்க வேண்டும் என வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் தெரி­வித்தார்.

ஏசியா பவுண்­டேசன் நிறு­வ­னத்தின் 60 ஆவது ஆண்டுப் பூர்த்­தியை முன்­னிட்டு யாழ்ப்­பாணப் பொது நூல­கத்­திற்கு 1.2 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான 284 நூல்கள் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்­நி­கழ்வு நேற்று முன்தினம்காலை யாழ்.பொது நூலக சிறுவர் பிரிவில் நடை­பெற்­றது. இதில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே முத­ல­மைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் அங்கு உரை­யாற்­று­கையில்,

யாழ்.நூல­கத்­துக்கு ஏசியா பவுண்­டே­சனால் நூல்­களை அன்­ப­ளிப்புச் செய்­த­தை­யிட்டு நான் மகிழ்­வு­று­கின்றேன். இந்­நூ­ல­கத்தின் கட்­டு­மா­னத்­திற்கு 1954 இல் ஏசியா பவுண்­டேசன் முதலில் வழங்­கிய உத­விக்கு நாங்கள் கடப்­பா­டு­டை­ய­வர்கள் ஆகின்றோம்.

கிழக்­கி­லேயே 95,000 நூல்­களைக் கொண்டு முத­லா­வ­தாக விளங்­கிய கால­மொன்­றுண்டு. ஆனால் 1981 இல் சமூகப் பிரி­வினை, இனப்­பி­ரிவு ஆகிய பலி பீடத்தில் அவற்றை நாம் பலி கொடுத்­து­விட்டோம். யாழ்.தீப­கற்­பத்தில் சாவ­கச்­சே­ரியில் நான் மாவட்ட நீதி­ப­தி­யாகக் கட­மை­யாற்­றினேன். ஒருநாள் விடி­கா­லையில் யாழ். நூல் நிலையம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டு­விட்­டது என்ற சாவ­கச்­சேரி காவல் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­காரி அசோகா தென்­னக்­கோனின் தொலை­பேசித் தக­வலால் துகி­லெ­ழும்­பினேன். யாழ்.நூல­கத்­துக்கு அண்­மையில் வாசம் செய்த அந்நாள் அரசின் மூத்த அமைச்­சரின் பால் அவ­ரது விரல் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. குடி­போ­தை­யி­லி­ருந்த சிங்­கள இரா­ணு­வத்­தினர் சிலரை அவர் தூண்­டி­ய­தாகச் சொன்னார். இத்­த­க­வலைக் கேள்­விப்­பட்ட 16 மொழி­களில் பாண்­டித்­தியம் பெற்­றி­ருந்த அருட்­தந்தை டேவிட் அந்த இடத்­தி­லேயே வீழ்ந்து மர­ண­மானார்.

முதல்நாள் மாலையில் அங்­கு­வி­டப்­பட்ட அவ­ரது முற்­றுப்­பெ­றாத ஆய்­வு­கட்­டுரை முற்­று­மு­ழு­தாகத் தீக்­கி­ரை­யா­னது.

அண்மைக் காலத்தில் நாம் அனு­ப­வித்த துய­ரி­லி­ருந்து சிறிது சிறி­­தாக வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்றோம். காலஞ்­சென்ற அமைச்சர் லக் ஷ்மன் கதிர்­காமர் அமைச்­ச­ராக வீற்­றி­ருந்­த­போது ஏசியா பவுண்­டேசன் அவ­ருடன் நெருக்­க­மாக இருந்து பொது­நூ­ல­கத்தின் புதுப்­பித்­த­லுக்குக் கை கொடுத்­தது.எங்­க­ளது இது­வ­ரை­கால இழப்­புக்­களை நிறை­வாக்க மீண்டும் ஏசியா பவுண்­டேசன் முன்­வந்­துள்­ளமை அதிஷ்­ட­க­ர­மா­ன­தாகும். இச்­சி­றப்புத் தகு­திக்­கான 60 ஆம் ஆண்டு காலத்தில் பொறுப்­பு­ரி­மை­யாளர் குழுவின் வரவும் தெம்­பூட்­டு­வ­தாகும். தமிழில் எழுத்தறிவித்­தவன் தெய்வ மாவான் என்ற பழ மொழி யுண்டு.புத்­த­கங்­களைக் கைய­ளிப்­ப­தற்­காக ஏசியா பவுண்­டே­ச­னி­லி­ருந்து மைக்கல் ஆர்­ம­கோஸ்ற்றும், டேவிட் ஆர்னோல்ட்டும் சமு­க­ம­ளித்­துள்­ளமை மகிழ்­வூட்­டு­கின்­றது. குழுவின் தலை­வ­ரான ஆர்­மகோஸ்ற் இயக்­குநர் குழுவின் அங்­கத்­த­வ­ரு­மாகும்.

ஏசியா பவுண்­டே­சனின் தலைவர் டேவிட் ஆர்னோல்ட் வருகைதந்ததற்காக நன்றியறிதலுடையவராவோம் என்றார்.

இந்நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், ஏசியன் பவுண்டேசனின் தலைவர் டேவிட் ஆர்னோல்ட், இலங்கைப் பிரதிநிதி டினோசா விக்கிரமநாயக்க, யாழ்.பொதுநூலக பிரதம நூலகர் மெல்டா கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்