March 27, 2023 6:08 am

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

2012ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2013ஆம் ஆண்டு  ஆரம்பக் காலப்பகுதிவரை கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு கட்டம் கட்டமாக  நஷ்டஈடு வழங்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முதற்கட்டமாக குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, சேத விபரங்களுக்கு அமைய 35 குடும்பங்களுக்கு  கடந்த டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தில்  நஷ்டஈடு  வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிளைப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் சுமார் 900 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  இருப்பினும்,  இதில் குறிப்பிட்ட ஒருதொகுதியினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினரால்  குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ரூபவதி கேதீஸ்வரனிடம் இன்று வியாழக்கிழமை கேட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பிரதேச செயலர் பிரிவுகள் ஊடாக  அடையாளம் கண்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

– கிளிநொச்சி விமல் | வணக்கம்LONDON க்காக –

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்