சற்று முன்னர் நடந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியில் திவாகர் மாபெரும் வெற்றி (படங்கள் இணைப்பு) சற்று முன்னர் நடந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியில் திவாகர் மாபெரும் வெற்றி (படங்கள் இணைப்பு)

விஜய் டிவி நடாத்தும் எயர்டேல் சூப்பர் சிங்கர் நான்காவது போட்டித்தொடரின் வெற்றியாளராக திவாகர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று சற்று முன்னர் முடிவடைந்துள்ள இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை சைட் சுபாகான்,  மூன்றாம் இடத்தை சரத் சந்தோஷ் பெற்றுள்ளனர்.

இறுதிச்சுற்றுக்கு ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டு இன்று இறுதிப் போட்டியில் பாட விடப்பட்டிருந்தது. கடும் போட்டியின் மத்தியிலும் இறுதிச்சுற்றுக்கு பார்வதி, சோனியா, திவாகர், சரத் சந்தோஷ் மற்றும் சைட் சுபாகான் தெரிவாகியிருந்தமை அனைவரும் அறிந்ததே.

நிகழ்வினை சுவாரசியமாக்க போட்டியாளர்களை பாடகர் வேல்முருகன் பாடல்மூலம் அழைத்தமை அனைவரையும் கவர்ந்தது. மிகப்பிரமாண்டமான அரங்கில் நடைபெற்ற இவ் மாபெரும் நிகழ்வில் பெரும் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

a1

a6

a9

a11

a12

a10

a7

a2

a8

a4

a3

a5

ஆசிரியர்