ராஜபக்சவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைராஜபக்சவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

13ம் திருத்தச் சட்ட மாற்றம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய அரசியல் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலும், வட மாகாணசபைத் தேர்தல், 13ம் திருத்தச் சட்டத்தில் ஏற்படுத்த உத்தேசித்துள்ள மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும்,இந்த சந்திப்பு எங்கு எப்போது நிகழும் என்பது பற்றிய சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஆசிரியர்