செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஜெனீவா எச்.எஸ்.பி.சில்சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஜெனீவா எச்.எஸ்.பி.சில்

சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஜெனீவா எச்.எஸ்.பி.சில்சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஜெனீவா எச்.எஸ்.பி.சில்

1 minutes read

சுவிட்சர்லாந்து போலீசார், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, ஜெனீவாவில் உள்ள, எச்.எஸ்.பி.சி., வங்கி அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். எனினும், இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஜெனீவா கிளையில், இந்திய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின், 1,195 ரகசிய கணக்குகள் உட்பட, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் கணக்கு விவரங்கள் கடந்த மாதம் வெளியாயின. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சுவிஸ் கோர்ட்டில், இவ்வங்கி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு உதவியதாகவும், வரி ஏய்ப்பு செய்ய தூண்டியதாகவும், வங்கி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வங்கி, 200க்கும் மேற்பட்ட நாடுகளில், 7.14 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, வரி ஏய்ப்பு செய்ய உதவியுள்ளதாக, கூறப்படுகிறது. இந்த பட்டியலில், 1,668 இந்திய வாடிக்கையாளர்கள் இடம் பெற்றுள்ள போதிலும், ஆவண பிழைகள் காரணமாக, இந்த எண்ணிக்கை, 1,195 ஆக குறைந்து உள்ளன. இவர்கள் வங்கி கணக்குகளில், 2007ம் ஆண்டு நிலவரப்படி, 25,420 கோடி ரூபாய் இருந்துள்ளது. இருந்தபோதிலும், அனைத்து கணக்குகளிலும், சட்டத்திற்கு புறம்பாக பணம் பதுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.