இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக புதிதாக விசாரணை மேற்கொள்வது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, ஐ.நா. மனித உரிமை அமைப்புடன் அடுத்த மாதம் ஆலோசனை செய்யவுள்ளார்.
இதுகுறித்து, இலங்கை வெளியுறவுத் துறை வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்ததாவது: “சாட்சிகள் பாதுகாப்புச் சட்ட’த்துக்கு கடந்த வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது. அத்துடன் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையான தகவல் உரிமைச் சட்டத்தையும் இலங்கை அரசு கொண்டுவரவுள்ளது.
இந்நிலையில், மனித உரிமை அமைப்பின் ஆணையர் ஜியாத் ராத் அல் ஹுசைனுடன் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா அடுத்த மாதம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அப்போது, போர்க் குற்றங்கள் குறித்து புதிய அரசு விசாரணை மேற்கொள்வது குறித்து விவாதிப்பார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.