செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மகாத்மா காந்தியின் சிலை பிரிட்டனில் மார்ச் 14-இல் திறப்புமகாத்மா காந்தியின் சிலை பிரிட்டனில் மார்ச் 14-இல் திறப்பு

மகாத்மா காந்தியின் சிலை பிரிட்டனில் மார்ச் 14-இல் திறப்புமகாத்மா காந்தியின் சிலை பிரிட்டனில் மார்ச் 14-இல் திறப்பு

0 minutes read

பிரிட்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் சிலை அடுத்த மாதம் 14-ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பி, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத் தொடக்கமிட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, 2015-இல் சிலை

திறக்கத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வந்தன.

வெண்கலத்தாலான சிலையை பிரிட்டனின் பிரபல சிற்பி ஃபிலிப் ஜாக்சன் வடிவமைத்து வந்தார்.

இதன் திறப்பு விழா வரும் மார்ச் மாதம் 14-ஆம் தேதி நடைபெறுமென பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை

வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற சதுக்கத்தில் காந்திஜியின் சிலை அமைக்கப்படுவது, இரு நாடுகளிடையேயான உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

உலகின் பழமையான ஜனநாயக நாடு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இடையே உள்ள உறவை இது மேலும் பலப்படுத்தும்

என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.