ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் குடியேற்றச் சட்டங்களைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சிட்னி உணவு விடுதியில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா எடுத்துவரும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையை பிரதமர் டோனி அப்போட் திங்கள்கிழமை வெளியிட்டார். வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான சட்டங்களைக் கடுமையாக்கும் அம்சமும் அதில் அடங்கும்.
சிட்னி உணவு விடுதித் தாக்குதல் சம்பவத்தை முன்கூட்டியே கண்டறிய முடியாததற்கு தற்போதைய பயங்கரவாதத் தடுப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளே காரணம் என டோனி அப்போட் தெரிவித்தார்.