பிரிட்டன் தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள், வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கியான எச்.எஸ். பி.சி.யில் பணம் பதுக்கியுள்ளது அம்பலமானது. இது குறித்து பிரிட்டன் பார்லி. நிதிக்குழு விசாரித்து வருகிறது.
வரி ஏய்ப்பு செய்து பணம் பதுக்கியவர்கள் யாரும் இல்லை என இக்குழுவிடம் கூறி தகவல் தர எஸ்.எஸ்.பி.சி.வங்கி மறுத்தது. ஆனாலும் மீடியாக்களின் ஆதாரத்துடன் வெளியானதையடுத்து.
எச்.எஸ்.பி.சி. வங்கி நிர்வாகம் பார்லி. நிதி குழுவிடம் மன்னிப்பு கேட்டது. இது தொடர்பாக எச்.எஸ்.பி.சி.வங்கியின் தலைவர் டக்ளஸ் பிளின்ட், தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் கெல்லிவர் ஆகியோர் , பார்லி. நிதி குழு முன் ஆஜராகி கூட்டாக அளித்த விளக்கத்தில் , இந்த விவகாரத்தில் சில ஏற்றுக்கொள்ளமுடியாத இக்குழுவிற்கு சம்பவங்கள் நடந்துவிட்டது. நடந்த தவறுக்கு தாங்கள் தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர்கள் அறிவித்தனர்.
1