நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பாகா நகரத்தை ராணுவம் மீட்டுள்ளது. இதையடுத்து கேமரூன் எல்லை அருகே உள்ள அந்த நகரின் பாதுகாப்பு நிலவரங்களை ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் கென்னத் மினிமா ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், “இடம்பெயர்ந்த பாகா நகர மக்கள், மார்ச் மாதம் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தங்கள் பகுதிக்கு திரும்ப முடியும். இந்த நகரை மீட்ட ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கை நைஜீரியர்களுக்கு பெருமையாக உள்ளது” என்றார்.
பாகா நகரில் போகோ ஹராம் தீவிரவாதிகள் ஆக்கிரமிக்க தொடங்கியதும் நைஜீரிய படைகள் அந்த நகரை விட்டு வெளியேறினர். அதன்பின்னர் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.