செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கைக்கடிகாரத்தில் காரை இயக்கும் நவீன தொழில்நுட்பம்கைக்கடிகாரத்தில் காரை இயக்கும் நவீன தொழில்நுட்பம்

கைக்கடிகாரத்தில் காரை இயக்கும் நவீன தொழில்நுட்பம்கைக்கடிகாரத்தில் காரை இயக்கும் நவீன தொழில்நுட்பம்

1 minutes read

அலைபேசி சந்தையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்களாக பல புதிய சாதனங்களை வடிவமைத்து வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் பற்றி பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இன்று லண்டனில் உள்ள கோவன்ட் கார்டன் ஆப்பிள் விற்பனை மையத்திற்கு வருகை தந்தார். அப்போது, காரை இயக்கும் தொழில்நுட்பத்துடன் ஆப்பிள் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆப்பிள் நிறுவனம் ரகசியமாக பேட்டரி கார் தயாரித்து வரும் செய்தி சமீபத்தில் வெளியான நிலையில், ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் இந்த புதிய வாட்ச் மூலம் அதே இயங்குதளத்தில் செயல்படும் காரை இயக்கும் திட்டம் ஆப்பிளிடம் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய கார் வகைகளான சொனாடாவில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில் இயங்கும் சாதனத்தின் மூலம் காரை இயக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், ஆப்பிள் இந்த தொழில்நுட்பத்தில் நிச்சயம் முன்னணி இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.