செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மனித-ஏலியன் மறைவுமனித-ஏலியன் மறைவு

மனித-ஏலியன் மறைவுமனித-ஏலியன் மறைவு

1 minutes read

லியோனார்ட் நிமோய் ஹாலிவுட் சினிமாவிற்கு கிடைத்த ஒரு அதிசய பிறவி என்றே கூறவேண்டும். 1931-ம் ஆண்டு பாஸ்டன் நகரில் பிறந்த நிமோய் 8 வயதிலிருந்தே சின்ன சின்ன புரொடக்‌ஷன் கம்பெனிகளில் நடிக்க ஆரம்பித்து, கல்லூரி படிப்பு முடிந்ததும் ஹாலிவுட்டில் நடிப்பிற்காக வாய்ப்பு தேடி அலைந்தார்.

1950-களில் கலிபோர்னியாவுக்கு சென்று சோடா கடை, கார் டிரைவர் என்று பகுதி நேரமாக பல வேலை பார்த்து நடிப்பு கற்றுக்கொண்டார். அவர் ஒரு நடிகனாக பிரபலமாக தொடங்கியது இந்த காலகட்டத்தில் தான். பின்னர் ‘ஸ்டார் ட்ரெக்’ திரைப்படம் ‘ட்விலைட் ஜோன்’ டிவி நெடுந்தொடர் என்று பல படங்களில் நடித்து தன் அற்புதமான நடிப்பால் உலக மக்களை வசப்படுத்தினார்.

பார்ப்பதற்கு சற்று விகாரமாக தெரியும் இவரது தோற்றம் ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தின் மனித-ஏலியன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப்போனது. அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக அந்த கதாப்பத்திரத்தின் பெயரான ‘ஸ்போக்’ என்றே அவரை ரசிகர்கள் அழைத்தனர். நடிப்பு தவிர கவிதை, புகைப்படம், இசை என்று பல துறைகளில் தன் முத்திரையை பதித்த ‘ஸ்போக்’ ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தின் 3 மற்றும் 4-ம் பாகத்தை இயக்கினார். 6வது பாகத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் பங்காற்றினார். இது மட்டுமின்றி 1977 நான் ஸ்போக் இல்லை என்றும் 1995-ல் நான் ஸ்போக் என்றும் தன்னை பற்றிய இரண்டு வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

கடந்த வருடம் முதலே நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்த நிமோய் நேற்று காலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு வயது 83.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.